வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

முடிந்த கூந்தலின் முடிவில்லா கதை - மனஹரன்

யாரிடம் சொல்லி அனுப்புவது?
அவிழ்ந்த கூந்தலின்
அனல் வரிகளில்
மூச்சுத் திணரியது போதும்

இழுக்க இழுக்க
கை வலிக்க வைத்த
அவலக்கதை போதும்

கோபம் விரல்காட்டும்
விழிகளின்
நிழலினில்கூட
இனி இளைப்பாற
ஆண்மைக்கு உரிமையில்லை

ஏனிந்த கண்ணீர்?
ஆணின் ஆணவ    த்தை
துகிலுரிக்கும்
தீ பார்வை
உனக்குள் சுரக்கும் போது

ஆவேசத்திலும்
அறிவிழக்காமல்
ஆழ்ந்த வார்த்தைகளை
நீ கோர்க்கும்போது
சூரிய பிரதேசத்தை
சுட்டெரிக்கும்
ஜுவலைகளை
எந்த நிலவிலாவது
தோண்டி எடுத்து
அவர்களுத்கெதிராய்
எய்திடும் நட்சத்திரம் நீ

ஏன் இந்த விம்மல்?
உனக்கு
வரங்கொடுக்கும்
வரிசையில்
மகாகவி பாரதியும்
மனு கொடுத்தான்
பாவினிலே
சரம் தொடுத்தான்

அவிழ்ந்த கூந்தல்
இன்னும் முடியவில்லை
முற்றுப்புள்ளி வைக்கவில்லை
முடிந்த கூந்தல்
நானுரைப்பேன் என
குரல்கொடுக்கும்
வைரமுத்துவும்
இன்னும் மொழியாக்கவில்லை
சொன்ன கதை
மறந்து போச்சா
சொல்லியனுப்ப
ஆளிருக்கு.

No comments:

Post a Comment