வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

தேவதைகளின் தோள்களில்…… -மனஹரன்


மழையின் துளியில்
தேடிப்பார்த்தேன்
அந்த மாய வார்த்தை
காணவில்லை



விடியும் வரையில்
காத்திருந்தேன்
எநச் சேவகரும்
விதையைத் தூவவில்லை

மண்ணில் விழுந்த
விண்மீன் அள்ளி
உன் பாதையெல்லாம்
நான் விதைப்பேன்

உன்
மௌன மொழி
கானங்கேட்டு
விடியும் வரையில்
விழித்திருப்பேன்

ஆனந்த கும்மியை நீயும் அடி
மகா பாரதி சொன்னாதப்பாதடி

 உன்
புன்னகையை
நான் திரட்டி
சிப்பிக்குள்ளே
தினம் புதைப்பேன்

சிட்டுக்குருவி
சொல்லும் மொழியை
சிக்காமல்
எனக்கு
சொல்லி முடித்தாய்

தட்டுத்தடுமாறும்
வெட்டுக்கிளியின்
ஜோடியாரென
தேடி விடைத்தாய்

கொட்டும் பனியில்
மெல்ல உலாவர
நித்தமொரு
சட்டம் விதிப்பாய்

தேர்வையெல்லாம் தூர வீசி எறி
அந்தத் தேவதை வருவாள் உன் வாசற்படி

மொட்டுமல்லிகை
கையில் ஏந்தி
காட்டும்படி
தினம்
சொல்லி அடிப்பாய்

சுட்டும் விரல்
மெல்ல நான் பிடிக்க
வானம் தொட்டு வர
எனை அழைப்பாய்

உன் வாசம் எனக்கொரு போதையடி
என் ஆயுள் வரைக்கும் வேண்டுமடி






No comments:

Post a Comment