
ம் ... ஆரம்பமாகிவிட்டது
இதுதான் புதிய மூலதானம்
மாதரின் விழிக்குள்
சிக்கியிருந்ததை
எப்படியோ களவாடிவிட்டார்களே!
விண்ணளந்த வார்த்தையின்
இலக்கு வென்றிட
கண்ணில் எச்சிலோடு
இன்னொரு முறை
மீட்டுக்கொடுப்பதாய்
சுய புலம்பல்
ஈனப்பிறவிகளின்
கைத்தட்டலில்
ஏகாந்த பிரமிப்பில்
மன நமச்சலை
சொரிந்துகொள்ள
விதண்டாவாதங்கள்
தகவல் ஊடகங்களின்
உள்ளார்ந்த ஆராதனையில்
வெற்றி வாளோடு
புறப்பட்டது
நம்பிக்கைகளைக்
காயடிக்கத்தானா ?
உச்சந்தலையில்
எரிச்சல்
இனி, ஆள வேண்டும்!
ஆழுகை வத்திகளை
அணைத்துவிடாதீர்கள்
இதுதான்
அரசியல் கண்டுகொடுத்த
புதிய ஆயுதம்
No comments:
Post a Comment