வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

ஹைக்கு


எங்கெங்கும் தேடிவிட்டேன்

எனக்குரியது இன்னும் மலரவில்லை

சுடுகாட்டுச் சமாதிகள்
*


உனக்கும் கேட்கிறதா

சன்னல் திரை கிழிந்துவிட்டது

முக்காலில் முனகும் அலமாரி
*


முன்னேறினால்தான்

மூன்றாவது கால் முளைக்கும்

மூட நம்பிக்கை

*

வேர்க்கடலைத் தீர்ந்தது

வேலை இன்னும் முடியவில்லை

கூண்டில் கிளி
*


மலர்களின் தொல்லையால்

மகரந்தங்களை வீசி எறிந்தன

காவல் நாய்கள்
*


மேலாடை இருப்பதினால்

உள்ளாடை இழந்தது தெரியாதவர்கள்

அரசியல்வாதிகள்

- மனஹரன், மலேசியா

No comments:

Post a Comment