வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

மனிதனின் கதை - மனஹரன்

நேற்று ஒரு கதையைப் படித்தேன்
மனிதர்களைப் பற்றி
யாரும் எழுதவில்லை


நாய்களைப் பற்றிய கதை

நாய்கள்
மூச்சுவிடுவதிலிருந்து
மூத்திரம் போவது வரை

நாய்களின்
மூத்திரத்தின் வாசத்தை
வகை வகையாய் பிரித்திருந்தான்

குரைக்கும் தன்மைகளை
நாயால்கூட
சொல்ல முடியாததை
இவன் சொல்லி இருந்தான்
ஏழு சுரங்கரங்களுக்குள்
சுருக்க முயன்றான்

மனிதன்
நாய்களிடத்திலும்
ஜாதியைப் பயிரிட்ட
சோகத்தை
சொல்லி அழுதிருந்தான்

 நாய்களின்
நிறை வேறாத காதலையும்
கலப்பு கல்யாணத்தையும்
அக்குவேறாய்
அளந்திருந்தான்

நாய்கள்
மனிதனை
முட்டாளாக்கிப் பார்ப்பதை
முன்னூறு வார்த்தை
எழுதி இருப்பான்

வால் இழந்த
நாய்களின்
வசை மொழிகளை
வரிசை படுத்த
தவறவில்லை

ஆண் நாய்களின்
ஆண்மைகளை
சூறையாடிய
கயவர்களுக்கு
நாய் விட்ட
சாபங்களை
சபைதனில்
சொல்ல முடியாமல்
மனசுக்குள் வெம்பினான்

நாய்கள் பெற்ற குட்டிகளுக்கு
பிறப்பு பத்திரத்தினை
எடுப்பவரை எண்ணி
கால் கொட்டும்
நாய்களையும்

நாய்களின் காலை
கையாய் பிடித்து
‘சேக்ஹெண்ட்’ செய்யும்
மனித மடையன்

நாய்களுக்குள்
தினசரி விவாதம்

No comments:

Post a Comment